

மரவேலைப்பாடுகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ள நிலையில், ஆயத்த நிலையிலான கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வாயிற்படி நிலைகள் உள்ளிட்டவைகளுக்கு சந்தை வாய்ப்பும், மக்களிடையே வரவேற்பும் அதிகரித்து வருகிறது.
கட்டுமானத் துறையில் அதிவேக வளர்ச்சியும், புதிய புதிய பொருள்களைப் பயன்படுத்தும் ஆர்வமும் அதிகரித்துள்ள போதிலும் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் மரத்தாலான கதவு, ஜன்னல், வாயிற்படி நிலைகளைப் பயன்படுத்தி வருவதே காலம் காலமாக நடந்துவருகிறது.
இந்த நிலையில், கால மாற்றத்துக்கேற்ப நவீன தொழில்நுட்பங்களோடு தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் ஆயத்த நிலையிலான கதவுகள், ஜன்னல்கள், நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த துறையில் ஆர்.பி.ஆர். நிறுவனம் கருப்பம்புலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் என பல இடங்களில் கிளைகள் அமைத்து, ஆயத்த நிலையிலான கதவுகள் உள்ளிட்ட மரப்பொருள்களை விற்பனை செய்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.பி. இராமகிருஷ்ணன். ஆர்.பி.ஆர். நிறுவனங்களை நடத்தி வரும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயியாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயத்த நிலையிலான கதவு, ஜன்னல், நிலைகளை மொத்தமாக தயாரித்து விற்பனை செய்கிறார். தேக்கு, வேங்கை, வேம்பு போன்ற தரமான மரங்களில் தயாரிக்கப்பட்டு, அளவு, வகைகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பூக்கள், பொம்மைகள் என நூற்றுக்கும் மேற்பட வடிவங்களில் கணினி உதவியோடு கடையப்பட்ட கதவுகள், கம்பி, கண்ணாடி பொருத்திய ஜன்னல்கள் போன்றவை எந்த நேரத்திலும் வாங்கும் வகையில் தயாராக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வீடு கட்டும்போது அதற்கு தேவையான நிலை உள்ளிட்டவைகளை செய்ய மரங்களை வாங்கிஅறுப்பது, இழைப்பது, கோர்ப்பது, கண்ணாடி, கம்பி பயன்பாட்டுக்கு அலைவது என கால விரையம், கூடுதல் செலவினங்கள் யதார்த்தமானது.
இந்நிலையில், ஒரு மணி நேரத்தில் தேவையான பொருள்களை எடுத்து வந்து, உடனே பயன்டுத்திக் கொள்ளும் வகையில் ஆயத்த மரப் பொருள்கள் கிடைப்பது வரவேற்பை பெற்று வருகிறது.
கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளால் நடுத்தரக் குடும்பத்தினர் சொந்த வீடு கட்டுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் தயாரிப்பு செலவைக் குறைத்தும், அலைச்சல்கள், காலவிரையத்தைப் போக்கும் வகையிலும் சேவையைத் தொடர்வதாகக் குறிப்பிடுகிறார் இராமகிருஷ்ணன்.
ஆயத்த நிலையிலான கதவுகள், நிலைகள் போன்றவைகளை விற்பனை செய்யும் ஆர்.பி.ஆர். நிறுவனங்களின் விற்பனை மையங்கள் தஞ்சாவூரில் ஆர்.ஆர். சாலை, புதிய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டியில் ஈ.சி.ஆர். சாலை, வேதாரண்யத்தில் இந்தியன் வங்கி அருகில், கருப்பம்புலம் வடகாடு சிவன்கோயில் தெரு ஆகிய இடங்களில் நேர்த்தியுடன் செயல்படுகின்றன.
கே.பி. அம்பிகாபதி, வேதாரண்யம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.