சிறு தொழிலாக கொட்டை பாக்கு உற்பத்தி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா ஆகிய பகுதியில் பாக்கு மரம் வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
சிறு தொழிலாக கொட்டை பாக்கு உற்பத்தி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா ஆகிய பகுதியில் பாக்கு மரம் வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இதனால், இந்த மரங்களில் விளையும் பாக்குக் கொட்டைகளைப் பயன்படுத்தி பாக்குகள் எடுத்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் தொழிலில் ஏராளமான குடும்பத்தினர் ஈடுபட்டு லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

ராசிபுரம் அருகே பட்டணம், புதுப்பட்டி, வடுகம் பனங்காடு, கல்லங்குளம், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, காரவள்ளி ஆகிய பகுதிகளில் பாக்குத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அம்மிக் கல், ஆட்டுக்கல் விலை தெரியுமா? அதை உருவாக்க எத்தனை நாள் ஆகும்?

தமிழகத்தில் ஆன்மிக விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் பாக்குகள் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தப் பாக்குத் தயாரிக்கும் தொழிலில் பல்வேறு குடும்பத்தினர் காலங்காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மலையடிவாரப் பகுதியில் அதிக அளவில் பாக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இப் பகுதியில் வளர்க்கப்படும் பாக்கு மரங்களைப் பாக்கு உற்பத்தியாளர்கள், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு ரூ. 200 முதல் ரூ. 250 வரை குத்தகைக்குப்பேசி அதை அறுவடை சீசனின்போது வந்து பாக்கு குலைகளை எடுத்துச் செல்கின்றனர்.

தவிர, பாக்கு மரம் வளர்ப்போரிடம் பாக்குக் கொட்டைகள் கிலோ ரூ. 30 என்ற விலையில் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மரங்களிலிருந்து பறித்துக் கொண்டு வரப்படும் பாக்குக் கொட்டைகள் கூலி ஆள்களைக் கொண்டு தோலுரித்து பின்னர் சாயமிட்ட நீரில் குறிப்பிட்ட நேரம் வரை கொதிக்க வைக்கின்றனர். அதைப் பின்னர், வெயிலில் காய வைக்கின்றனர். காய வைத்த பாக்குக் கொட்டைகளை இயந்திரம் மூலம் தோலுரித்து பதப்படுத்தும் முறையிலும் பாக்கு தயார் செய்கின்றனர்.

இப் பகுதி சிறு விவசாயிகள் குறிப்பாக வடுகம் பனங்காடு, காரவள்ளி போன்ற பகுதிகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாக்கு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அதிக அளவில் பெண்கள் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் பாக்குகள் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு கொட்டைப் பாக்கு, சிராபாக்கு, தாம்பூலப் பாக்கு என பல்வேறு வகைகளில் பாக்கெட்டுகளாக்கப்பட்டு விற்பனைக்காக சந்தைக்கு வருகிறது. விவசாயம் சார்ந்த இந்த பாக்கு உற்பத்தி நல்ல லாபம் தருவதுடன், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com