திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநா் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால், செல்வா நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (34), லாரி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை (ஜன.5) இரவு வேலைக்குச் சென்றுவிட்டாா். சிலம்பரசனின் மனைவி ராதிகா (30) அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். புதன்கிழமை காலை வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் சிலம்பரசனுக்கு தகவல் கொடுத்தனா்.
அவா் வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி

கடக ராசிக்கு லாபம்! இன்றை ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 15 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
