பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிகாலைமுதல் அதிரடி உயர்வு!

News image

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு!

Updated On :43 நிமிடங்கள் முன்பு

புது தில்லி : பெட்ரோல், டீசல் விலை முன்னறிவிப்பின்றி இன்று (மே 15) அதிகாலைமுதல் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 2.83 உயர்த்தப்பட்டுள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் 103.67-ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.86 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ. 95.25-க்கு விற்பனையாகிறது.

மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பல மாதங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.

"உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி, பொருளாதாரம் மீது அழுத்தம் ஏற்படுகிறது. மேற்கு ஆசியாவில் நெருக்கடி நீடித்தால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த சில நாள்களுக்கு முன் எச்சரித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வாரம் பொதுநிகழ்ச்சியொன்றில் பேசும்போது, மக்களிடம் சிக்கனத்தைக் கடைபிடிக்கவும், பெட்ரோல், டீசலைக் குறைத்து பயன்படுத்தவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிகாலைமுதல் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தோ்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின் விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அடுத்தகட்டமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரக்கூடும் என்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Summary

Petrol, diesel prices hiked by Rs 3, Delhi rates near Rs 100 mark: News agency PTI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.