உங்களது வீட்டுக்கு வருபவர்களை பார்த்த கணத்தில் முதலில் ஈர்த்து வரவேற்பது நுழைவாயிலில் உங்களது விருப்பத்திற்கேற்ப நீங்கள் அமைத்துக் கொண்ட இரும்புக் கதவுகள் தான். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு உங்கள் வீட்டைப் பற்றியும், வீட்டிலுள்ள மனிதர்களைப்பற்றியும் நல்ல விதமான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வல்லமை வீட்டு முகப்பின் இரும்பு வாயில் கதவுகளுக்கு எப்போதுமே உண்டு. உங்களது வாயில் கதவுகள் அவற்றின் கடினமான உலோகத்தன்மையின் காரணமாக வீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தாலும் தினந்தோறும் நிமிடத்துக்கு நிமிடம் வெயிலாலும், மழையாலும், கடும்பனியாலும் அவற்றின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
தலைமுறைகள் பல கடந்தாலும் உங்களது முகப்பு இரும்புக் கதவுகளை சரியாகக் கவனித்து முறையாகப் பராமரித்தால் மட்டுமே அவை நீடித்து உழைத்து விருந்தினர் வருகையின் போது அவற்றின் புராதனத் தன்மையை பறைசாற்றும்.
ஒரு விசயத்தை எப்போதும் நினைவில் வையுங்கள், உங்களது இரும்பு வாயில் ககதவுகள் முதன் முதலாக நீங்கள் அவற்றை உங்களது வீட்டு முகப்பில் பொருத்திய போது எப்படி இருந்ததோ அதே பொலிவுடன் என்றென்றும் காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்குமானால் முதலில் அவற்றை ’துரு’ பாதிப்பில் இருந்து நீங்கள் காப்பாற்றியே தீர வேண்டும். துரு வராமல் எப்படி பாதுகாப்பது? நாள் தவறாது இரும்புக் கதவுகளை சுத்தம் செய்வது, இரும்புக் கதவுகளில் ஈரம் இல்லாது துடைத்து உலர்வாக வைத்துக் கொள்வது, போன்ற உகந்த தடுப்பு முறைகள் எதையாவது செய்யலாம்.
அட! அடிக்கடி சுத்தம் செய்வது... துடைப்பது இதெல்லாம் சிரமமான வேலை என்று அலுத்துக் கொள்பவர்கள் பலர் இருப்பார்கள். உங்களது சிரமத்தைப் போக்கி இரும்புக் கதவுகளை எளிமையாகப் பாதுகாத்து பராமரிக்கத் தான் ஏசியன் பெயிண்ட்ஸ் எபாக்ஸி பிரைமர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இரும்பு வாயில் கதவுகளின் பராமரிப்புக்கென்று தற்போது சந்தையில் கிடைக்கும் மற்ற எல்லாவற்றையும் விட ஏசியன் பெயின்ட்ஸ் எபாக்ஸி பிரைமர்கள் 50 மடங்கு அதிக உறுதித் தன்மையையும் உழைப்பையும் தரவல்லவை. கடும் கோடை வெயில், ஸ்தம்பிக்க வைக்கும் பலத்த மழை எனும் சுற்றுப்புற காரணிகளால் எந்த நொடியிலும் பாதிப்படையத் தயர் நிலையில் இருக்கும் நமது இரும்புக் கதவுகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏசியன் பெயிண்ட்ஸ் எபாக்ஸி பிரைமர்களைக் காட்டிலும் சிறந்த துணையை காண்பது அரிது.

எபாக்ஸி பிரைமர்கள் துருவில் இருந்து இரும்புக் கதவுகளைப் பாதுகாப்பதில் தன்னிகரற்றவை, மேலும் உங்களது இரும்புக் கதவின் உலோகப் பரப்பில் அவற்றின் ஒட்டும் தன்மை, சுரண்டல் மற்றும் நகக்கீறல்களால் பாதிப்படையாமல் நீடித்துழைக்கும் தன்மை போன்ற சிறப்பு அம்சங்களை அள்ளித் தரவும் எபாக்ஸி பிரைமர்களால் மட்டுமே எளிதில் முடியும்.

ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கல்ச்சரில் வடிவமைப்பட்ட ”அரிப்பைத் தடுத்து எதிர்க்கும் வேதியியல்” முறையின் வல்லமையால் மட்டுமே இது சாத்தியமாகிறது. இம்முறையில் எபாக்ஸி பிரைமர் பெயிண்ட் ஃபிலிமின் கரையாத உறுதித் தன்மை 1000 மணி நேரம் தொடர்ச்சியான கால இடைவெளியில் ’சால்ட் ஸ்ப்ரே’ டெஸ்ட் மூலம் சோதிக்கப்பட்டு அவற்றின் நீடித்த உறுதித் தன்மை நிறுவப்படுகிறது.

இத்தகைய ஏசியன் பெயிண்ட் எபாக்ஸி பிரைமர்கள் தற்போது 2-பாக் எபாக்ஸி பிரைமர்கள் மற்றும் 1-பாக் எபாக்ஸி பிரைமர்கள் எனும் 2 மாறுபட்ட கலவைகளில் சந்தையில் கிடைக்கின்றன.
இன்னும் எதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்? ஏசியன் பெயின்ட்ஸ் எபாக்ஸி பிரைமர்களால் உங்கள் வீட்டு இரும்புக் கதவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


