நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ப்யூல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன்  அறிமுகமாகும் சுஸுகியின் ஜிக்ஸெர் எஸ்எப்!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், ப்யூல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் எப்ஐ என்னும் புதிய பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 6:53 pm IST

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், ப்யூல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப்எப்ஐ என்னும் புதிய பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஜிக்ஸெர் எஸ்எப் எப்ஐ, சுஸுகியின் மோட்டோஜிபி எஸ்எப் எடிசனில் மட்டுமே கிடைக்கும். உருவத்தில் மோட்டோஜிபி எஸ்எப் எடிசனை ஒத்திருக்கும் ஜிக்ஸெர் எஸ்எப் எப்ஐயின் முன்பக்க ஃபேரிங்கின் இடது பக்கத்தில் எப்ஐ பேட்ஜ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த சிறப்பு பதிப்பு தற்போது அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும். இந்த டீலர்களிடம் ரூ. 5000 செலுத்தி, இதனை ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை - ரூ. 99262.

புதிய சிறப்பு பதிப்பு மாடல்கள்

தனது ஜிக்ஸெர் பைக்கின் இரண்டு புதிய சிறப்பு பதிப்பு மாடல்களையும் சுஸூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிக்ஸெர் எஸ்பி, ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி  எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல்கள் ரேஸ் பைக்குகளை  ஒத்த கிராபிக்ஸுடனும், ப்ரத்யோக ரியர் டிஸ்க் பிரேக்குடனும் வெளிவந்திருக்கிறது. 

மேலும் இதன் மரூன் வண்ண இருக்கையும், க்ளியர் லென்ஸ் எல்இடி பின்புற விளக்குகளும் சிறப்பான தோற்றத்தை தரும். மேட் ஃபைபிராய்ன் கிரே மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய இருவண்ணங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த சிறப்பு பதிப்புகள் முறையே ரூ. 80726 மற்றும் ரூ. 88857 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.