இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 2,151 கோடி டாலராக (ரூ.1.41 லட்சம் கோடி) இருந்தது என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோலியம், தோல் உள்ளிட்டப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. அதையடுத்து அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,151 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதி ஆண்டின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி மதிப்பான 2,158 கோடி டாலருடன் ஒப்பிடும்போது இது 0.3 சதவீதம் குறைவாகும்.
இறக்குமதி 14% குறைந்து 2,991 கோடி டாலராக இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை 767 கோடி டாலராக காணப்பட்டது.
குறிப்பாக, தங்கம் இறக்குமதி 77.45% வீழ்ச்சி கண்டு 111 கோடி டாலராகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி 8.47% சரிந்து 674 கோடி டாலராகவும் காணப்பட்டது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.