
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் "வாய்ஸ் ஓவர் எல்டிஇ' (விஓஎல்டிஇ) சேவையை வோடஃபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சூட் கூறுகையில், விஓஎல்டிஇ அறிமுகம் என்பது நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளிப்பதற்கான நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கை என்று கூறினார்.
முதல்கட்டமாக மும்பை, குஜராத், தில்லி, கர்நாடகம், கொல்கத்தா அகிய தொலைத் தொடர்பு சரகங்களில் அறிமுகப்படுத்தப்படும் அந்த சேவை, விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
விஓஎல்டிஇ சேவைக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என்றும் அவை கூறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.