"தன திரயோதசி' தினத்தில் 3 லட்சம் வாகனங்கள் விற்பனை
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தீபாவளிக்கு முந்தைய தன திரயோதசி தினத்தில் (அக்.-17) 3 லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.


நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தீபாவளிக்கு முந்தைய தன திரயோதசி தினத்தில் (அக்.-17) 3 லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
இந்த தீபாவளி பண்டிகை காலம் ஹீரோ மோட்டோகர்ப் நிறுவனத்துக்கு மறக்க முடியாததாகும். தன திரயோதசி நாளான செவ்வாய்க்கிழமை மட்டுமே 3 லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளோம். இது, முன்னெப்போதும் கண்டிராத அளவாகும். வேறு எந்த நிறுவனமும் ஒரே நாளில் இத்தனை லட்சம் வாகனங்களை விற்றதாக சரித்திரம் இல்லை.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 7 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதையடுத்து அம்மாதத்தில், வாகன விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 20,22,805 என்ற எண்ணிக்கையைத் தொட்டது என்றார் அவர்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை அண்மையில்தான்
7.5 கோடி என்ற ஹிமாலய இலக்கை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...