மும்பை: சமீப காலமாக இல்லாத அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைக்காலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அத்துடன் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் வர்த்தக கெடுபிடிகளாலும் சில நாட்களாக ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
அதேசமயம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு புதனன்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பருக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த திடீர் மிரட்டலின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் ஏறக்கூடும் என்ற அச்சம் பொதுவாக ஏற்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழனன்று மேலும் சரிந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. புதன்கிழமை அன்று அது 36 காசுகள் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. ஆனால் வியாழக்கிழமையான இன்று ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 69.10 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு இதுவரை வரலாற்றில் இல்லாத சரிவாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ 70 என்ற அபாயகரமான அளவுக்குச் செல்லக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

திரிணமூல் வங்கிக் கணக்குகளை முடக்க அதிருப்தி தலைவா் கடிதம்: தொடா் பின்னடைவில் மம்தா அணி
தூத்துக்குடியில் 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



