வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் தொழில்..!

​கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் தொழில்..!
Published on
Updated on
2 min read


கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், டிராக்டர் லாரி உள்ளிட்ட  கனரக வாகனங்கள்  தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஏராளமான வாகனங்கள் விற்பனையாகாமல் தொழிற்சாலைகளிலும், விநியோகஸ்தர்களிடமும் தேங்கிக் கிடக்கின்றன. பல úஸா ரூம்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துறையில் ஏராளமானோர்  வேலை இழந்துள்ளனர்.

வாகன தயாரிப்பு  நிறுவனங்களின்  கடந்த 4 காலாண்டுகளின்  நிதி நிலை அறிக்கைகள்  மெச்சும்படி அமையவில்லை. கடந்த ஜூனில் கார் விற்பனை 25 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், உள்பட இருசக்கர வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஜூலை வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவில் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. குறிப்பாக மொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பை அளிக்கு முன்னணி 5 நிறுவனங்களின் வாகன விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது.  உற்பத்திக்கு ஏற்ப தேவைப்பாடு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஜாம்ஷெட்பூர் உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்  செயல்படுகின்றன. இந்நிலையில், ஜாம்ஷெட்பூரில் உள்ள ஆதித்யபூர் தொழிற்பேட்டையில் செயல்படும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலைகள் மூடப்படும் அபாய கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடும் நெருக்கடியான சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக ஒருவாரம் ஆலை செயல்படவில்லை. ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததே இதற்குக் காரணம் என ஆட்டோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த ஜூலையில் 40 சதவீதம் ஆர்டர்  குறைந்துள்ளதாக கம்பெனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதே நிலைதான் நாட்டில் பல்வேறு இடங்களில்  செயல்பட்டு வரும்  ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் நிலை என்று கூறப்படுகிறது.  

இந்நிலையில், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அத்துறை நிறுவனப் பங்குகளின் விலையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பங்குகளின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

தேசிய பங்குச் சந்தையில் 15 ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஆட்டோ குறியீடு  கடந்த ஒரு மாதத்தில் 6 சதவீதமும், ஓராண்டில் 35 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளன. 

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 15 நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ மட்டுமே கடந்த ஓராண்டில் 1.50 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற அனைத்து நிறுவனப் பங்குகளும் 20 முதல் 67 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால், 50 பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ஒரு மாதத்தில் 4 சதவீதம், ஓராண்டில் 3 சதவீதம் என்ற அளவில்தான் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த ஓராண்டில் அதிக அளவு சரிவை சந்தித்துள்ள ஆட்டோ நிறுவனப் பங்குகள் (சதவீதத்தில்):

மதர்சன் சுமி    63
டாடா மோட்டார்ஸ்    52
அசோக் லேலண்ட்    49
எம் அண்டு எம்     41
அப்பல்லோ டயர்ஸ்    40
எக்ûஸட்  இண்டஸ்ட்ரöஸ்    37
ஐஷர் மோட்டார்ஸ்    36
மாருதி சுஸூகி    35
பாரத் ஃபோர்ஜ்    32
டிவிஎஸ் மோட்டார்ஸ்    25
எம்ஆர்எஃப்    25
போஸ்க் லிமிடெட்    25
அமரராஜா பேட்டரிஸ்    24
ஹீரோ மோட்டோ கார்ப்    21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com