வணிகம் 2019

இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளர் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அவரது 
வணிகம் 2019
Updated on
1 min read

ஜனவரி


5:    இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளர் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு. 


பிப்ரவரி

4:    லண்டனில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஒப்புதல். இதற்கான உத்தரவில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டார்.

19:    புதிய தேசிய மின்னணுவியல் கொள்கை-2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இக்கொள்கையின்படி, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மின்னணு துறையில் ரூ. 26 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபடவும், இதன்மூலம் நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு  புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடிவு.


மே 

20:    சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் 7 அடிப்படை அலகுகளில் நான்கான கிலோகிராம், கெல்வின், மோல், ஆம்பியர் ஆகியவற்றை மறுவரையறை செய்வதற்கு 60 நாடுகள் ஒப்புக் கொண்டு இயற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது.


ஜூலை

12:    உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அலுவலர் பொறுப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டார்.


ஆகஸ்ட்

30:    வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக பல்வேறு பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு நடவடிக்கையால், 27-ஆக இருந்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆக குறைந்தது.


செப்டம்பர்

18:    இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு.


அக்டோபர்

 23:    பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


நவம்பர்

6:    ஒன்றாக இணைக்கப்பட்ட பிஎஸ்என்எல் மற்றும் எம்எடிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) பொதுத் துறை நிறுவனங்கள், பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தன.


டிசம்பர்

15:    நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், கால விரயத்தைத் தவிர்த்தல், எரிபொருள் வீணாவதைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக "ஃபாஸ்டேக்' முறையில் பணம் செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com