தீபாவளியைக் கொண்டாட பஜாஜ் பின்செர்வின் எளிமையான தொந்தரவு இல்லாத தனிநபர் கடனை பெறுங்கள்!

வீட்டை சுத்தம் செய்வது முதல் புது ஆடைகளை வாங்குவது, புதிதாக நகைகள், பரிசுபொருட்கள் வாங்குவது என தீபாவளி களைகட்டும். இதுதவிர வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை இருக்கும்.
தீபாவளியைக் கொண்டாட பஜாஜ் பின்செர்வின் எளிமையான தொந்தரவு இல்லாத தனிநபர் கடனை பெறுங்கள்!
Published on
Updated on
2 min read

நாட்டின் மிகப்பெரியப் பண்டிகைகளில் ஒன்று தீபாவளிப் பண்டிகை ஆகும். மற்ற பண்டிகைகளை ஆடம்பரமாக, சிறப்பாக கொண்டாடாவிட்டாலும் தீபாவளி அதற்கு விதிவிலக்கு தான். அனைத்து தரப்பு மக்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அதனை மறுக்க முடியாது. 

வீட்டை சுத்தம் செய்வது முதல் புது ஆடைகளை வாங்குவது, புதிதாக நகைகள், பரிசுப்பொருட்கள் வாங்குவது என தீபாவளி களைகட்டும். இதுதவிர வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை இருக்கும். அவர்களை முறையாக கவனிப்பது, நண்பர்களை சந்திப்பது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் அரங்கேறும். இவை அனைத்திற்கும் மூலாதாரமாக இருப்பது முறையாகத் திட்டமிடல் மற்றும் நிதி ஆகும். 

இந்த ஆண்டு உங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை சிறப்பாகக் கொண்டாட ஒரு சிறந்த வழி என்னவென்றால், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதாகும். இந்த இணையில்லாத தீர்வு தீபாவளியை நல்ல முறையில் கொண்டாட உங்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் வழங்குகிறது. 

உதாரணமாக, பஜாஜ் ஃபின்செர்வ் தனிநபர் கடன், நீங்கள் கடைசி நிமிடத்தில் பரிசுப்பொருட்களை வாங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதுதவிர வீட்டை புதுப்பித்தல் மற்றும் கண்கவர் தீபாவளி விருந்துக்கும் பயனளிக்கும். 

பஜாஜ் தனிநபர் கடன் தீபாவளி கொண்டாட்டங்களை எப்படி நனவாக்குகிறது? 

அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய அதிகக் கடன் தொகை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்களது வீட்டை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால் இந்த தனிநபர் கடன் அதற்கானத் தொகையை வழங்குகிறது. உங்களது வீட்டை புதுப்பிக்க பெயிண்ட் செய்வது அல்லது வீட்டின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தை புதுப்பிப்பது, வீட்டின் ஒருபகுதியை மட்டும் மாற்றுவது, ஒரு கேரேஜை மட்டும் இணைப்பது, வீட்டு மாடித்தோட்டம் உருவாக்குவது என வீட்டின் பகுதி வேலைகள் அனைத்திற்கும் தேவையான தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 


பண்டிகை உற்சாகம் சற்றும் குறையாமல், கடனை வாங்கித் திருப்பிச் செலுத்துங்கள்!

நீங்கள் பஜாஜ் ஃபின்செர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன. அதாவது திருப்பிச் செலுத்தும்போது தேவையற்ற நிதி தொடர்பான அழுத்தம் உங்களுக்கு இருக்காது. மேலும், உங்களிடம் 60 மாதங்கள் வரை கால அவகாசம் உள்ளது. எனவே நீங்கள் கடனை நிதானமாக திருப்பிச் செலுத்தலாம். கடன் குறித்து யோசிக்காமல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். 

உடனடி நிதிகளைப் பெற்று, கடைசி நிமிட திட்டங்களை நனவாக்குங்கள்!

பண்டிகைக் காலங்களில் உங்களது மனதில் உதிக்கும் திடீர் மற்றும் கடைசி நிமிட கனவுகளை உடனடியாக நனவாக்க முடியும். நீங்கள் உங்களது குடும்பத்தினருக்காக புதிய மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்பினாலோ அல்லது தீபாவளி விடுமுறை நாட்களில் குடும்பத்தினரை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தாலோ, உங்களது இந்த திட்டங்கள் கடைசி நிமிடத்தில் இருந்தாலும் பஜாஜ் பின்செர்வ் தனிநபர் கடன் மூலமாக இதனை செயல்படுத்தலாம். எந்தவித கடின விதிமுறைகள் இல்லாவமல் தனிநபர் கடனை நீங்கள் எளிதாக பெறமுடியும். 

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தல் ஒரு சில நிமிடங்களில் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்யப்படும். உண்மையில், பஜாஜ் பின்சர்வ்  மூலமாக அங்கீகரிக்கப்பட்ட கடன்களை ஒரு சில நிமிடங்களில் பெறலாம், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் நிதி வழங்கப்படும். 

உங்களது செலவைக் குறைத்து நிதியை நெகிழ்வாகப் பயன்படுத்துங்கள்! 

நீங்கள் உங்கள் வீட்டைப் புதுப்பிக்கும்போது அல்லது உங்கள் சமையலறை உபகரணங்களை மாற்றுவது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்யும்போது, உங்கள் செலவு அதிகரிக்கலாம். குறிப்பிட்ட அளவு தான் செலவாகும் என்று உங்களால் கணிக்க முடியாது. 

பஜாஜ் பின்சர்வ் அதன் ஃப்ளெக்ஸி கடன் வசதி மூலம் இதுபோன்ற செலவுகளை நிவர்த்தி செய்ய உங்களால் முடியும். கடன் வாங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இ.எம்.ஐ.களாக வட்டியை மட்டுமே செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம், உங்களது தவணைகளை 45% வரை குறைக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், திருவிழா கொண்டாட்டத்தை முழு மனதுடன் அனுபவிக்க முடியும். உங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதைப் பற்றி கவலைப்படாமல்  விழாவைக் கொண்டாட பஜாஜ் பின்செர்வ் உங்களது உறுதுணையாக இருக்கும். 

உங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை எந்த வித இடையூறும் இல்லாமல் சிறப்பாகக் கொண்டாட தனிநபர் கடனில் இருந்து கிடைக்கும் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த கடனின் மூலம் நிதியுதவியைப் பெறுவதற்கான விரைவான மற்றும் எளிய வழி உள்ளது. மேலும், குறிப்பிட்ட சில விபரங்களை அளிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான தனிநபர் கடனைப் பெறலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com