லெனோவோ 'திங்க் ஸ்மார்ட் வியூ' டிஸ்பிளே அறிமுகம்

லெனோவோ நிறுவனம் 'திங்க் ஸ்மார்ட் வியூ' என்ற பெயரில் வெப்கேமராவுக்கான புதிய சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
லெனோவோ 'திங்க் ஸ்மார்ட் வியூ' டிஸ்பிளே அறிமுகம்

லெனோவோ நிறுவனம் 'திங்க் ஸ்மார்ட் வியூ' என்ற பெயரில் வெப்கேமராவுக்கான புதிய சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலமாக மைக்ரோசாஃப்ட் குரூப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை பெற முடியும்.

கூகுளின் ஹோம் ஏ.ஐ(Home AI) தொழில்நுட்பம் தற்போது மைக்ரோசாஃப்ட் குழுக்களின் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது லெனோவாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனிப்பட்ட வணிக தொடர்பு சாதனமான 'திங்க் ஸ்மார்ட் வியூ' மைக்ரோசாஃப்ட் குழு அழைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் இந்த சாதனம் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 349 டாலர்( இந்திய மதிப்பில் ரூ.25,000)முதல் 449 டாலர்( இந்திய மதிப்பில் ரூ.32,000) என்ற அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சாதனதத்துடன் ஒரு ப்ளூடூத் ஹெட்ஃபோனும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே 8 அங்குல தொடுதிரை மற்றும் ஒருங்கிணைந்த கேமரா மைக்ரோஃபோன், ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

இதுதவிர, லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 5 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, பிரைவசி ஷட்டர், டூயல் மைக்ரோபோன் அரே, 1.75 இன்ச் 10 வாட் ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காம் APQ8053 சிஸ்டம்-ஆன்-சிப் (SoC) ஆல் இயக்கப்படுகிறது.  2 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி இஎம்எம்சி ஸ்டோரேஜ் மற்றும் 2.2 பவுண்டுகள் எடையைக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com