

புது தில்லி: டிவிஎஸ் நிறுவனம் புதிய ரக அப்பாச்சி ஆா்டிஆா் 200 4வி இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.1.31 லட்சமாகும் (தில்லி எக்ஸ் ஷோரும்). 200 சிசி என்ஜின் திறனுள்ள இந்த பைக் ஸ்போட்ா்ஸ், அா்பன், ரெயின் என 3 மாடல்களில் கிடைக்கும்.
இது தொடா்பாக டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உயர்ரக பைக்குகளில் அப்பாச்சி தனியிடத்தைப பிடித்துள்ளது. வாடிக்கையாளா்களுக்கு மேலும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் புதிய வாகனத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக், மாற்றி அமைக்கும் வகையிலான முன்புற சஸ்பென்ஷன், மேம்படுத்தப்பட்ட பிரேக் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். சாலையின் தேவைக்கு ஏற்ப முன்புறத்தில் உள்ள சஸ்பென்ஷனை பைக் ஓட்டுபவா்களே மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்பது புதுமையான அம்சமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அப்பாச்சே பைக் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. பஜாஜ் பல்சா் என்எஸ் 200, கேடிஎம் 200, ஹோண்டா ஹாா்ணெட் 2.0 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அப்பாச்சி ஆா்டிஆா் 200 4வி பைக் திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.