கால் டாக்சி சேவையில் மின்சார கார்; சீனாவில் அறிமுகமாகிறது!

ஊபர், ஓலா போன்ற கால் டாக்சி சேவையைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார் கால் டாக்சி சேவையை துவங்கும் பணியில் இரு சீன நிறுவனங்கள் இணைந்துள்ளன. 
மின்சார கார்
மின்சார கார்

ஊபர், ஓலா போன்ற கால் டாக்சி சேவையைத் தொடர்ந்து, 'மின்சார கார்' கால் டாக்சி சேவையை துவங்கும் பணிக்காக இரு சீன நிறுவனங்கள் இணைந்துள்ளன. 

திதி சக்ஸிங் என்ற சீனாவின் மிகப் பெரிய கால் டாக்சி நிறுவனமும் உலகின் மிகப் பெரிய மின்வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான பி.ஒய்.டி. கம்பெனி லிமிடெட் ஆகியவை இணைந்து டி1 (D1) என அழைக்கப்படும் மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 

இதன்படி, டி1 கார்கள் வரும் மாதங்களில் சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. நாடு முழுவதும் அதிக பயணிகளுக்கு சேவை வழங்கும் பொருட்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக வருகிற டிசம்பர் மாதம் சீனாவின் சாங்ஷா நகரில் இது தொடங்கப்படும் என்றும் 55 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயணிகள் மற்றும் 3.1 கோடிக்கும் அதிகமான ஓட்டுநர்களைக் கொண்டு எலெக்ட்ரிக் கார்கள் மூலமாக கால் டாக்சி சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி1 என்பது வாகன உற்பத்தியாளர்களுக்கும் கால் டாக்சி சேவை நிறுவனத்திற்கும் இடையேயுள்ள இணைப்பு என்றும் இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் திதி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜெஸ்ஸி யாங் சன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com