இந்தியாவில் அறிமுகமான ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன்

சாம்சங் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஒப்போ நிறுவனத்தின் ஏ53 2020 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஒப்போ ஏ53
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஒப்போ ஏ53

சாம்சங் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஓப்போ நிறுவனத்தின் ஏ53 2020 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

சமீபத்தில் இந்தோனிஷியாவில் அறிமுகமான ஓப்போ ஏ53 2020 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் ஷூட்டர், 2 எம்பி மேக்ரோ கேம் மற்றும் 2 எம்பி டீப் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமராவும்  இணைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் கைரேகை சென்சார் வசதியும் உள்ளது. 

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ53 செல்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் 10யை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஓப்போ ஏ53 செல்போனில் மற்றொரு சிறப்பம்சமாக 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் பயன்பாட்டுக்கு சிக்கல் இருக்காது. மேலும் 18 வாட் அதிவேக சார்ஜிங் இருப்பது கூடுதல் பலம்.

வடிவமைப்பில் கூடுதல் கவனம் பெற்றுள்ள ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் இந்த செல்போனின் வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளன.

ஓப்போ ஏ53யில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியோடும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடும் அறிமுகமாகியுள்ள ஓப்போ ஏ53யில் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பையும் பயன்படுத்த வசதி உள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC சிப்செட் வசதி இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உள் சேமிப்பை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,990 ஆகவும், 6 ஜிபி ரேம்  128 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,490 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எலக்ட்ரிக் பிளாக், ஃபேரி வைட் மற்றும் ஃபேன்ஸி ப்ளூ என மூன்று வண்ணங்களில் கிடைக்கும் ஓப்போ ஏ53 ஆகஸ்ட் 25 முதல் இந்தியாவில் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com