
சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவின் அறிக்கையின்படி, ஹவாய் நோவா 7 ஸ்மார்ட் போன் வருகிற ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மார்ச் 26 அன்று பாரிஸில் இந்நிறுவனத்தின் ஹவாய் பி40 சீரிஸ் வெளியான பின்னர் ஹவாய் நோவா 7 வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நோவா 7 கிரின் 990 SoC உடன் வர உள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி ஹவாய் நிறுவனம் நடக்கவிருக்கும் ஒரு மாபெரும் விழாவில் நோவா 7 யை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட நோவா 6 யைத் தொடர்ந்து அடுத்த வெர்ஷனாக நோவா 7 அறிமுகமாகிறது.
6.40 அங்குல தொடுதிரை, ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 810 SoC ப்ராசசர், 2.27GHz வேகத்தில் இரண்டு கோர்களும், 1.88GHz வேகத்தில் ஆறு கோர்களும் உள்ளன. 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.18,900 என்று கூறப்படுகிறது.