
புணேவில் ரூ. 300 கோடி செலவில் மின்சார வாகனம் உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | மீள்பார்வை 2021
இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
“அகுர்டியில் உள்ள பஜாஜ் ஆட்டோ உற்பத்தி தளத்தில் மின்சார வாகன உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
சுமார் 5 லட்சம் சதுர அடியில் அமையவுள்ள உற்பத்தி நிலையத்தில் முதல்கட்டமாக 800 பணியாளர்கள் பணிபுரிவார்கள்.
ஆண்டிற்கு 5 லட்சம் வாகனங்கள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வதற்கான திறன் கொண்டதாக உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளன. மேலும், ஜூன் 2022க்குள் முதல் உற்பத்தி சந்தைக்கு வெளியிடப்படும்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.