மடிக்கக் கூடிய வகையில் ஹூவாய் ஸ்மார்ட் போன்: பிப். 22-ல் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தில் மடிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேட் எக்ஸ் 2 ரக செல்போன் வரும் 22-ம் தேதி சந்தையில் அறிமுகமாகிறது.
மடிக்கக் கூடிய வகையில் ஹூவாய் ஸ்மார்ட் போன்: பிப். 22-ல் அறிமுகம்
மடிக்கக் கூடிய வகையில் ஹூவாய் ஸ்மார்ட் போன்: பிப். 22-ல் அறிமுகம்


ஹூவாய் நிறுவனத்தில் மடிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேட் எக்ஸ் 2 ரக செல்போன் வரும் 22-ம் தேதி சந்தைக்கு அறிமுகமாகிறது.

ஸ்மார்ட் போன்கள் அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்து வரும் நிலையில், சீனாவின் ஹூவாய் நிறுவனம் மடிக்கக் கூடிய வகையிலான  செல்போன்களை தயாரித்துள்ளது.

மேட் எக்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரக ஸ்மார்ட் போன்கள் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போன்று உள்புறமாக மடிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களைப் போன்றே முகப்பு ஸ்கிரின் அளவைக் கொண்டிருந்தாலும், கிரின் 9000 என்ற அதிக சக்தி வாய்ந்த பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 கடந்த ஆண்டே சந்தையில் வெளியாக இருந்த நிலையில், சீன உதிரிப் பொருள்களின் மீது அமெரிக்கா விதித்த தடை காரணமாக ஸ்மார்ட் போன் வெளியாக தாமதமாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com