தூக்கக் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸா: அமேசான் திட்டம்

பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.
தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டம்
தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டம்

பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், உள்ளங்கை அளவுள்ள அலெக்ஸா கருவியை உருவாக்கி வருவதாகவும், இது படுக்கையறையில் படுக்கைக்கு அருகே வைத்திருந்தால், பயனாளியின் மூச்சுக்காற்றின் வேகத்தை உணரும் மிகத் துல்லியமான ரேடார் அலை மூலமாக கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவி பிரம்ஸ் என்ற குறிப்புப் பெயருடன் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புப் பணி தற்போது எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து  வெளியிட அமேசான் மறுத்துவிட்டது.

ஒருவேளை நீங்கள் மிக சத்தமான குறட்டையுடன் இரவு முழுவதும் நன்றாக உறங்கினாலும், சோர்வாகவே உணர்வீர்கள். இதுதான் உறக்கக் கோளாறு. 

இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் ஜப்பான் நிறுவனமான நின்டென்டோ, அணிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத, ரேடியோ அலைக்கற்றை வாயிலாக உறக்கத்தை கண்காணிக்கும் கருவியை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த கருவி அறிமுகமாகவேயில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com