புதிய அம்சங்களுடன் வெளியாகும் லெனோவா 'யோகா டேப் 13'

சீன நிறுவனமான லெனோவா புதிய அம்சங்களுடன் யோகா டேப் 13 என்ற டேப்லட் கணினியை அறிமுகம் செய்யவுள்ளது.
புதிய அம்சங்களுடன் வெளியாகும் லெனோவா 'யோகா டேப் 13'

சீன நிறுவனமான லெனோவா புதிய அம்சங்களுடன் யோகா டேப் 13 என்ற டேப்லட் கணினியை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் திரை மடிக்கணினிகளுக்கு கூடுதல் திரையாகவும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்து பயன்படுத்தும்போது 180 டிகிரி கோணத்தில் திரையை திருப்பும் வகையில் துருப்பிடிக்காத எஃகு கம்பியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தால் விடியோக்களின் போது சுவற்றில்  மாட்டிக்கொண்டும் இதனைப் பயன்படுத்தலாம்.

13 அங்குலத்தில் ஆண்டிராய்டு இயங்குதளத்தில் யோகா டேப் 11, டேப் M7, டேப் M8 போன்றவையும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவை இந்த கோடைகாலத்திற்கு பிறகு இந்திய சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகா டேப் 13 டேப்லட் கணினியில் எளிமையாக குறிப்புகளை எடுக்கும் வகையில், எழுதுகோல் வழங்கப்படுகிறது. மேலும், 8MP கேமரா அம்சத்துடன் விடியோ கால் செய்யும்போது வெளிப்புற சத்தங்களை குறைக்கும் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் 12 மணி நேரத்திற்கு பேட்டரி திறனும், 1080 திரைத் துல்லியமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விடியோக்கள், புத்தகங்கள், இசை, விளையாட்டு போன்ற பல்வகை பயன்பாட்டுக்கு ஏற்ப கூகுள் எண்டர்டெயின்மெண்ட்  அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் 'திங்க் பேட் X1 Fold'  என்ற மடிக்கக் கூடிய டேப்லட் கணினியை லெனோவா அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com