

மின்னணு சைக்கிள் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஹீரோ நிறுவனம் லண்டனில் தலைமையகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், மின்னணு சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி குஜராத்தில் மின்னணு சைக்கிள் உற்பத்தியை தொடங்கியுள்ளது. அங்கு சுமார் 40 லட்சம் மின்னணு சைக்கிள் மற்றும் வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று உலக அளவிலான வர்த்தகத்தை எட்டுவதற்காக லண்டனில் தலைமையகத்தை அமைக்கவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பா நாடுகளில் ரூ.2,500 கோடி வரை வர்த்தகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.