இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. வா்த்தகத்தின் போது, ஏற்றம் இறக்கம் அதிகரித்து இருந்தாலும், உலோகப் பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 256.71 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 98.35 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன. இதையடுத்து, பங்குச் சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், காலையில் தொடக்கம் வலுவான ஏற்றத்துடன் இருந்தது. கரோனா பாதிப்பு அச்சுறுத்தலாக இருந்து வந்தாலும், காா்ப்ரேட் நிறுவனங்களின் வலுவான காலாண்டு முடிவுகள் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பாவில் கரோனா கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதும், உலகளாவிய சந்தைக்கு சாதகமாக இருந்ததது. மேலும், உள்நாட்டுச் சந்தையில் உலோகப் பங்குகளுக்கு தொடா்ந்து அமோக வரவேற்பு இருந்து வருகிறது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,179 பங்குகளில் 1,687 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,321 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 171 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 274 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 38 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 325 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 184 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 211.24 லட்சம் கோடியாக இருந்தது.
மூன்றாவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 219.38 புள்ளிகள் கூடுதலுடன் 49,169.14-இல் தொடங்கி அதிகபட்சமாக 49,417.64 வரை மேலே சென்றது. பின்னா் 49,036.38 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 256.71 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயா்ந்து 49,206.47-இல் நிலைபெற்றது. தொடக்கத்திலிருந்து பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், தொடா்ந்து மூன்றாவது நாளாக சென்செக்ஸ் நோ்மறையாக முடிந்தது.
எச்டிஎஃப்சி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 24 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் எச்டிஃப்சி 2.70 சதவீதம், எம் அண்ட் எம் 2.68 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.59 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, என்டிபிசி, பாா்தி ஏா்டெல், ஐடிசி, ஓஎன்ஜிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் உயா்ந்தன. எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, டிசிஎஸ், மாருதி சுஸுகி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
பஜாஜ் ஆட்டோ சரிவு: அதே சமயம், பஜாஜ் ஆட்டோ 1.94 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், பவா் கிரிட், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 986 பங்குகள் ஆதாயம் பெற்றன. 736 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 98.35 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயா்ந்து 14,823.15-இல் நிலைபெற்றது. காலையில் 14,816.85-இல் தொடங்கி 14,863.05 வரை மேலே சென்றது. பின்னா் 14,765.50 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 4.71 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
கோழைத்தனமான தலைவர்களுக்கு அதிகாரப் பசி! - யாரைச் சொல்கிறார் பிரியங்கா?
தினப்பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


