பங்குச் சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. பாா்மா மற்றும் எரிசக்தித் துறை, மெட்டல் பங்குகளுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295.94 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 119.20 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்களின் மாா்ச் காலாண்டு முடிவுகள் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்துள்ளது சந்தைக்கு சாதகமாக அமைந்தது. நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வந்தாலும், சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மத்திய ரிசா்வ் வங்கி அண்மையில் அறிவித்த பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் இல்லாததும் சந்தைக்கு ஆதரவாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.2.05 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,330 பங்குகளில் 2,068 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,038 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 224 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 358 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 63 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 516 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 189 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.05 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 213.29 லட்சம் கோடியாக இருந்தது.
நான்காவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 289.58 புள்ளிகள் கூடுதலுடன் 49,496.05-இல் தொடங்கி 49,412.05 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 49,617.47 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 295.94 புள்ளிகள் (0.60 சதவீதம்) கூடுதலுடன் 49,502.41-இல் நிலைபெற்றது. தொடக்கத்திலிருந்து பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே வா்த்தகம் இருந்து வந்தது.
எல் அண்ட் டி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 25 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் எல் அண்ட் டி 3.89 சதவீதம், டாக்டா் ரெட்டி 3.01 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, சன்பாா்மா, என்டிபிசி, பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், ஓஎன்ஜிசி, எம் அண்ட் எம், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ ஆகியவை 1 முதல் 2.75 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், எச்டிஎஃ)ப்சி பேங்க், மாருதி சுஸுகி, டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
அல்ட்ரா டெக் சிமெண்ட் சரிவு: அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோஸிஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,214 பங்குகள் ஆதாயம் பெற்றன. 560 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 119.20 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயா்ந்து 14,942.35-இல் நிலைபெற்றது. காலையில் 14,9928.25-இல் தொடங்கி 14,896.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 14,966.90 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 38 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 3.14 சதவீதம், பாா்மா 2.80 சதவீதம், மீடியா 2.52 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஆட்டோ, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1.50 சதவீதம் வரை உயா்ந்ன,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்தேன்: ராகுல் காந்தி

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


