சமீபத்தில் நடைமுறைக்கு வந்த 'கூ' செயலி 30 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 218 கோடி) நிதி திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்று 'கூ' என்ற புதிய செயலி அறிமுகமாகி தற்போது செயல்பாட்டில் உள்ளது.
'கூ' செயலியை கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
'அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளங்களில் ஒன்றாக வளர எங்களிடம் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு இந்தியரும் இதனை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்த கனவை நனவாக்க டைகர் குளோபல் எங்களது சரியான பங்களிப்பாகும்' என்று கூறியுள்ளார் 'கூ'வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா.
'கூ'வின் தற்போதைய முதலீட்டாளர்கள் அசெல் பார்ட்னர்ஸ், கலாரி கேபிடல், ப்ளூம் வென்ச்சர்ஸ் மற்றும் ட்ரீம் இன்குபேட்டர் ஆகியவை உள்ள நிலையில் புதிய முதலீட்டாளர்கள் இணைவதாக நிறுவனம் கூறியுள்ளது. இதன்படி கூ செயலி 30 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 218 கோடி ஆகும். மத்திய அரசின் விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் இன்னும் ஒப்புதல் தெரிவிக்காததால் இன்று முதல் ட்விட்டர் செயல்படாது என்று தகவல் வந்ததன் எதிரொலி தான் இது என்று கூறப்படுகிறது.
60 லட்சம் பயனர்களைக் கொண்டுள்ள 'கூ' செயலி இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பயனர்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.