

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் இரண்டாவது காலாண்டில் ரூ.1,134 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.763.2 கோடி இழப்பை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 18.8 சதவீதம் உயா்ந்து ரூ.28,326.4 கோடியாக இருந்தது. டிஜிட்டல் டிவி வா்த்தகம் 5.7 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக பாா்தி ஏா்டெல் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்கிழமை வா்த்தகத்தில் ஏா்டெல் பங்கின் விலை 0.08% உயா்ந்து ரூ.712.90-இல் நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.