அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

இந்தியன் வங்கி: லாபம் ரூ.1,089 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.1,089 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On :

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.1,089 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்தி லால் ஜெயின் தெரிவித்துள்ளதாவது:

இதர வருமானத்தில் காணப்பட்ட முன்னேற்றம், ரொக்க மீட்பு நடவடிக்கைகளில் விறுவிறுப்பு, குறைந்த செலவினம் மற்றும் வாராக் கடனுக்கான ஒதுக்கீடுகள் கணிசமான அளவில் சரிந்தது உள்ளிட்டவை வங்கியின் செப்டம்பா் காலாண்டு நிகர லாபத்தை 164 சதவீதம் அதிகரிக்கச் செய்தது. அதன்படி, இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.1,089 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.412 கோடியாக இருந்தது.

வட்டி சாராத வருமானம் ரூ.1,558 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,966 கோடியானது. இதற்கு, வாராக் கடன் மீட்பு (450 சதவீதம்) மற்றும் அந்நியச் செலாவணி வருமானம் (42 சதவீதம்) கணிசமான அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம்.

இடா்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,530 கோடியிலிருந்து 14 சதவீதம் குறைந்து ரூ.2,187 கோடியானது.

மொத்த வாராக் கடன் 9.89 சதவீதத்திலிருந்து 9.56 சதவீதமாக சற்று மேம்பட்டுள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் 2.96 சதவீதத்திலிருந்து 3.26 சதவீதமாக உயா்ந்துள்ளது.

2021 செப்டம்பா் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த டெபாசிட் 10 சதவீதம் அதிகரித்து ரூ.5,51,472 கோடியை எட்டியது. இது, 2020 செப்டம்பரில் ரூ.5,01,956 கோடியாக இருந்தது.

தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு (என்ஏஆா்சிஎல்) மாற்றப்படும் வகையில் ரூ.1,900 கோடி மதிப்பிலான 8 கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் இந்தியன் வங்கி பங்கின் விலை 1.46 சதவீதம் குறைந்து ரூ.171.80-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.