சோனி இந்தியாவுடன் இணையும் ’ஜீ' நிறுவனம்
சோனி இந்தியாவுடன் இணையும் ’ஜீ' நிறுவனம்

சோனி இந்தியாவுடன் இணையும் ’ஜீ' நிறுவனம்

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான ’ஜீ தொலைக்காட்சி’ நிதி நெருக்கடியால் சோனி இந்தியா நிறுவனத்துடன் இணைய இருக்கிறது.
Published on

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான ’ஜீ என்டர்டைன்மெண்ட்’ நிதி நெருக்கடியால் சோனி இந்தியா நிறுவனத்துடன் இணைய இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ’ஜீ’ குழுமத் தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனிக்கப்படாததால் அந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் ‘ஜீல்’ எனப்படுகிற ’ஜீ’ பங்குகள் கணிசமாக குறையத் தொடங்கியது.

இதனால் முதலீட்டாளர்கள் அச்சம் அடையத் தொடங்கினர். இதற்கிடையில் கடந்த வாரம் திடீரென ‘ஜீ’ பங்குகளின் விலை 20 சதவீதம் அதிகரித்து அதன் பங்கை வாங்கியவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் கடந்த நிதியாண்டில் ரூ.700 கோடி லாபத்தை காட்டியிருந்தார்கள். தற்போது சோனி இந்தியா நிறுவனத்துடன் ரூ.11,625 கோடிக்கு ஒப்பந்தாமகியிருக்கிறது ஜீ நிறுவனம். 

இதனால் இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமாக சோனி-ஜீ கூட்டணி உருவாகிறது.  இனி லாபத்தில் 47.07 சதவீதம் ஜீ பங்குகளுக்கும் மீதம் இருக்கிற 52.93 சதவீதம் சோனி நிறுவனத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com