இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், லாபப் பதிவால் நிலைத்து நிற்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 410 புள்ளிகளை இழந்து 59,667-இல் நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி வீழ்ச்சி கண்டது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக சென்செக்ஸ் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனப் பங்குகளான இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் உள்ளிட்டவை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதனால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. லாபப் பதிவு காரணமாக இரண்டாவது நாளாக ஐடி, ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிர்கொண்டன. அதே சமயம், மின்துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,425 நிறுவனப் பங்குகளில் 1,502 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,755 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 215 நிறுவனப் பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 25 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 361 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 181 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன.
சந்தை மூலதன மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி சரிந்து வர்த்தக முடிவில் ரூ.259.69 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,08,66,225-ஆக உயர்ந்துள்ளது.
லாபப் பதிவு:
சென்செக்ஸ் காலையில் 208.01 புள்ளிகள் கூடுதலுடன் 60,285.89 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,288.44 வரை மட்டுமே உயர்ந்தது. பின்னர், லாபப் பதிவு காரணமாக 59,045.53 புள்ளிகள் வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 410.28 புள்ளிகளை (0.68 சதவீதம்) இழந்து 59,667.60-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 1,032.35 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ், பின்னர் வர்த்தக நேர முடிவில் ஓரளவு மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.
பவர் கிரிட், என்டிபிசி அபாரம்:
பிரபல மின்துறை நிறுவனங்களான பவர் கிரிட் 4.40 சதவீதம், என்டிபிசி 3.94 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக சன்பார்மா, டைட்டன், கோட்டக் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவர், மாருதி சுஸýகி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
பார்தி ஏர்டெல் கடும் வீழ்ச்சி:
பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 3.68 சதவீதம் மற்றும் டெக் மஹிந்திரா 3.41 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், டிசிஎஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் 1 முதல் 2.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 106 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 683 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,135 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 106.50 புள்ளிகளை (0.60 சதவீதம்) இழந்து 17,748.60-இல் நிலைபெற்றது. காலையில் 17,906.45-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,912.85 வரை உயர்ந்தது. பின்னர், 17,576.10 வரை கீழே சென்றது.
ஐடி, ரியால்ட்டி குறியீடு சரிவு: நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 32 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.34 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.22 சதவீதம், மெட்டல் குறியீடு 0.55 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், இரண்டாவது நாளாக ரியால்ட்டி குறியீடு 3.02 சதவீதம், ஐடி குறியீடு 2.20 சதவீதம், மீடியா குறியீடு 1.66 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


