பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் நிறைவு: சென்செக்ஸ் 434 புள்ளிகள் சரிவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது.  சென்செக்ஸ் 434 புள்ளிகள் வரை சரிந்தது.
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவு
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது.  சென்செக்ஸ் 434 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434.93 புள்ளிகள் சரிந்து 50,889.76 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.85 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 137.20  புள்ளிகள் சரிந்து 14,981.75 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.91 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. இன்றைய (பிப்.19) வர்த்தக நேர முடிவில் மற்ற 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.


இதில் அதிகபட்சமாக ஓஎன்ஜிசி 5.06 சதவிகிதமும், எஸ்பிஐ 3.77 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 3.59 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 3.20 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன. கடந்த நான்கு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 1,250 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com