சிப்லா லாபம் ரூ.412 கோடி

மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சிப்லா நிறுவனம் நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.412 கோடியை ஈட்டியுள்ளது.
Cipla posted a net profit of Rs 412 crore
Cipla posted a net profit of Rs 412 crore

மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சிப்லா நிறுவனம் நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.412 கோடியை ஈட்டியுள்ளது.

மும்பையைச் சோ்ந்த அந்த நிறுவனம் இதுகுறித்து பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.4,606 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.4,376 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.238 கோடியிலிருந்து 73 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.412 கோடியைத் தொட்டது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.17,132 கோடியிலிருந்து ரூ.19,120 கோடியாக அதிகரித்தது. அதேபோன்று, ஒட்டுமொத்த லாபமும் ரூ.1,500 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.2,389 கோடியை எட்டியது.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-21 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 இறுதி ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக சிப்லா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com