2021 ஆம் ஆண்டில் வாங்குவதற்கான 7 சிறந்த  5ஜி ஸ்மார்ட் கைபேசிகள் 

அதிவேக பிணையம் மற்றும் தகவல் தொடர்பு விருப்பத்தேர்வுகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்,
2021 ஆம் ஆண்டில் வாங்குவதற்கான 7 சிறந்த  5ஜி ஸ்மார்ட் கைபேசிகள் 
2021 ஆம் ஆண்டில் வாங்குவதற்கான 7 சிறந்த  5ஜி ஸ்மார்ட் கைபேசிகள் 

அதிவேக பிணையம் மற்றும் தகவல் தொடர்பு விருப்பத்தேர்வுகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறப்பு கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தத் திருப்பத்தில் முன்னணி வகிக்க அவர்களது சிறந்த உழைப்பை அளித்துவருகிறார்கள். பல்வேறு நாடுகளில் 5ஜி‌ தொழில்நுட்பம் ஏற்கனவே இயக்கத்தில் இருந்து வருகிறது மற்றும் அது இந்தியாவிற்கு வருகை தருவது எந்த நொடியிலும் நிகழலாம். இருப்பினும் 5 ஜி இயக்க கருவிகள் சந்தையில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டன. இந்தப்புத்தம் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ,  சாம்சங், ஒன் ப்ளஸ் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றோடு சேர்ந்து OPPO latest mobile இன் பல்வேறு பதிப்புகள் ஏற்கனவே கிடைக்கின்றன.  மற்றும் அவற்றை நீங்கள் மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

கேமிங், இசை ஸ்ட்ரீமிங், மற்றும் காணொளிக்காட்சிகள் போன்ற தீவிர தரவுகள் பயன்பாட்டு சேவைகளை விரும்பும் பயனர்கள் அதிகரித்துவரும் நிலையில் 5ஜி‌ தொழில்நுட்பம் கொண்ட கருவிகளுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மிக அதிகளவிலான முக்கிய விற்பனையாளர்கள் நெக்ஸ்ட் ஜென் சிறப்பு கைபேசிகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில்  அதிலிருந்து சிறந்த ஒன்ற தேர்ந்தெடுப்பது மிகவும் சவால் நிறைந்த  விஷயமாக இருக்கும்.

ஒன்ப்ளஸ்நார்ட் 2

இந்த நிறுவனத்தின் 5ஜி சிறப்பு கைபேசிகளில் புத்தம் புதிதான ஒன்று, புத்தம் புதிய சமீபத்திய அனைத்து சிறப்பியல்புகளும் இதில்  அடங்கியிருக்கிறது. நீங்கள் 5ஜி யின் முழுப்பயனையும் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இதில் மீடியா டெக் டைமன்சிடி 1200, 2.6Ghz CPU போன்ற  பல சிறப்பியல்புகள் அடங்கியுள்ளன.  இது 410ppi 1080X2400 பிக்ஸெல் ரெசொல்யூஷனுடனான  ஃப்ளூயிட் AMOLED திரையை கொண்டுள்ளது. இதில் 50MP திறன் கொண்ட முக்கிய கேமிராவுடன் மூன்று பின்புறக் கேமிராக்களின் தொகுப்பு ஒன்று உள்ளது மற்றும் அத்துடன் ஒரு  32MP திறன் கொண்ட முன் புறக்கேமிராவை பகட்டாகக் காட்சிப்படுத்துகிறது. இது  ஒரு மிகச்சிறந்த கருவி, கிட்டத்தட்ட  உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடியது

ரியல் மீ. 8 5ஜி 

டைமன்சிடி 700 5ஜி ஆக்டா-கோர் 2.2 GHz பிரோசாசரை கொண்ட ரியல்மீ 8 5ஜி இங்கிருக்கக் கூடிய 5ஜி சிறப்பு கைபேசிகளிலேயே மிக அதிக வேகம் கொண்டது. 8.5 மி.மி. கனஅளவுடன் மிக மெல்லிய வடிவமைப்புடனும் மற்றும் 90Hz அல்ட்ரா வழவழப்புடன் கூடிய  காட்சிஅமைப்பும் கொண்ட இந்த கைபேசி உண்மையிலேயே மனதை விட்டு நீங்காத காட்சி அனுபவத்தை அளிக்கிறது. இது இரட்டை சிம் கார்டு வசதியுடனும் பக்கவாட்டில் ஒரு விரல் ரேகை உணர் கருவியையும் கொண்டு உண்மையிலேயே மதிப்பு மிக்க உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. நீங்கள் குறைந்த செலவில் ஒரு சிறந்த 5ஜி கருவியை வாங்க விரும்பினால், ரியல் மீ 8 உங்களை ஏமாற்றாது.

ஷாவ்மி MI 11X

இந்த 6.67 இன்ச் அகலத் திரையைக் கொண்ட சிறப்புக் கைபேசி விளையாட்டுப் பிரியர்களுக்கான ஒரே கைபேசி. புதுப்பிக்கும் வேகம்  120 Hz ஆகவும் மிக அதிவேக காட்சியமைப்புடனும் கூடியது. இந்த 5ஜி கைபேசி.  இது இரு வேறு வடிவங்களில் மற்றும் கண்கவரும் மூன்று வண்ணங்களில்  கிடைக்கிறது . இது ஸ்நாப்டிராகன் 870, ஆக்டா-கோர், 3.2GHz பிராசசர் ஒரு அதிவேக 6ஜிபி RAM கூறகத்தையும்  பெருமையோடு பறைசாற்றுகிறது. இதில் 128 ஜிபி ROM உள்ளது அது உங்களுக்கு ஒரு தடையில்லா அனுபவத்தை உறுதி செய்கிறது. இது பயனரின் அனுபவத்தை எளிமையாக்கும் வகையில்  உருவாக்கப்பட்ட ஓஎஸ் ஆண்ட்ராய்ட் v11 ஆல் இயக்கப்படுகிறது மற்றும் முழுமையான மேம்படுத்தப்பட்ட உணர்வை அளிக்கிறது. 5ஜி கருவிகளுக்கு மத்தியில் MI 11X நிச்சயமாக கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. 

சாம்சங் கேலக்ஸி A22 5G

சாம்சங் நிறுவனம் சிறப்பு கைபேசித் துறைப்பிரிவுச் சந்தையில் பலவருடங்களாக தலைமை இடத்தை வகித்துவருகிறது. மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் ஒன்று. அதன் 5ஜி கைபேசி தயாரிப்பு வரிசைகளில், சாம்சங் A22 5ஜி‌ சிறப்பு கைபேசி தனித்து நிற்கிறது. இந்த 5ஜி சிறப்பு கைபேசி டைமன்சிடி 700, ஆக்டாகோர் 2.2 GHz பிராசசர், 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு நிறைவான 5,000Ahசக்தி கொண்ட மின்கலத்துடன் அதிவிரைவு  மின்னேற்ற திறன் கொண்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பியல்புகளும் ஒன்றிணைந்து இதை ஒரு மிகச்சிறந்த கருவியாக நிலைக்கச்செய்கிறது குறிப்பாக ரூ. 20,0000 க்கும் குறைவான விலையில்  5ஜி சிறப்பு கைபேசியை வாங்கும் நோக்கத்துடன் இருப்பவர்களுக்கு.

ஆப்பிள் ஐஃபோன் 12 ப்ரோ

ஐஃபோன் 12 முதன்மையான 5ஜி ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலில் வருவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. இந்த உயர்-ரக சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ராமுடன் வருகிறது, 12எம்பி+12எம்பி+12எம்பி முன்று பின்பக்க கேமரா அமைப்பு மற்றும் ஒரு 12எம் பி முன்பக்க கேமரா கொண்டிருக்கிறது. இது பயானிக் ஏ14,3.1 கிகாஹெர்ட்ஸ் ப்ரசஸரால் சக்தி பெற்று மென்மையான மற்றும் உள்ளுணர்வுடன் கூடிய அனுபவத்தை அளிக்கிறது. இந்த ஐஃபோன், வழக்கமானதைப் போலவே, அழகான 6.10 இன்ச், 1170*2532 பிக்செல்கள் டிஸ்பிளே கொண்டிருக்கிறது, இது இதனை உண்மையிலேயே சிறந்த 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களில் ஒன்றாக்குகிறது.

ஓப்போ ரெனோ 6 5ஜி

ஓப்போ 5ஜி ஃபோன் மாடல்கள் சிறந்த சிலவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றின் இடையே உள்ளது ரெனோ 6 5 ஜிஎன அறியப்பட்ட ஓப்போ சமீபத்திய மொபைல் மாடல். இந்த மிக-மெல்லிய , பழங்கால வடிவம் கொண்ட ஃபோன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரெஜ் கொண்டிருக்கிறது. இது டைமென்சிட்டி 900, ஆக்டோ-கோர் ப்ராசஸர் கொண்டிருக்கிறது, மற்றும் ஆன்ட்ராய்டு வி11 அடிப்படையிலான கலர்ஸ் 11.3 -யில் இயங்குகிறது.கேமரா தொழில்நுட்பத்தைப் பார்க்கும் போது, இது 64 எம்பி மெயின் கேமரா 32 எம்பி முன்பக்க கேமராவுடன் ட்ரிப்பிள் ஷூட்டர் அரே கொண்டிருக்கிறது. இது நிச்சயமாக 5ஜி தளத்தில் மதிப்பு மிக்க போட்டியாளர்.

வீவோ வி20 ப்ரோ

இந்த வீவோ வி20 ப்ரோ , அதன் பிரிவில் முதன்மையாக செயல்படுவதால், நிச்சயமாக பட்டியலில் சேரும். இந்த மிக-மெல்லிய ஸ்மார்ட்ஃபோன் கட்டுபடியாகக்கூடிய ஒரு விலை புள்ளியில் அதன் பல அம்சங்களுடன் மார்கெட்டைப் பிடித்திருக்கிறது.இதன் சக்தி-மிக்க செயல்திறன் கிட் ஸ்நாப்டிராகன் 765ஜி 2.4 கிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 8ஜிபி ராம் கொண்டிருக்கிறது. இன்னும் என்ன, 44எம் பி + 8 எம்பி இரட்டை முன்பக்க கேமராவுடன் இந்த பட்டியலில் உள்ள 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இது மட்டுமே. இது 64 எம்பி இரவு நேர மெயின் கேமராவுடன் முன்று முன்பக்க கேமராக்களையும் கொண்டிருக்கிறது.

5ஜி சமீபத்திய தொழில்நுட்பம் என்பதால், 5ஜி-க்கு பொருந்தக்கூடிய ஃபோன்கள் மிகவும் விலை உயர்ந்தது என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. இருந்தாலும், ஓப்போ ரெனோ 6 5ஜி (8ஜிபி, 128 ஜிபி) போன்ற ஸ்டார்ட்ஃபோன்கள் வெறும் ரூ.29,990 ல் தொடங்குகிறது. இது உங்கள் பாக்கெட்டைக் கடிக்காமல் இருக்க, பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ ஸ்டோரில் ஷாப்பிங் செய்வதன் மூலமாக நீங்கள் சமீபத்திய OPPO 5G phone-ஐ அல்லது வேறொரு பிராண்டிலிருந்து ஒரு ஃபோனை நீங்கள் வாங்கலாம்.

மொபைலின் விலையை தவணைகளாக மாற்றி இணக்கமான ஒரு காலத்தில் சௌகரியமாக திருப்பிச் செலுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவதே. உங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ நெர்வொர்க் கார்டை செக் அவுட்டில் உபயோகித்து வட்டி இல்லாத மாத தவணை, எந்த ஆரம்பத் தொகையும் இல்லை, 24 மணி நேரங்களில் இலவச டெலிவரி போன்ற ஆர்வத்தை தூண்டும் பலன்களைப் பெறுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com