
வீட்டுக்கடன் வழங்கும் முன்னணி நிறுவனமான எச்டிஎஃப்சி விரைவில் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது.
தொடர்ந்து லாபத்துடன் இயங்கி வரும் முன்னணி வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன்(HDFC bank) வீட்டுக்கடன் வழங்கும் எச்டிஎஃப்சி(HDFC) விரைவில் இணைகிறது.
முதலில், எச்டிஎஃப்சி இன்வெஸ்ட்மெண்டஸ் (HDFC investment) மற்றும் எச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ்(HDFC holdings) ஆகிய நிறுவனங்கள் எச்டிஎஃப்சியுடன் இணைகிறது.
அதற்குப் பின், எச்டிஎஃப்சி நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. இந்த இணைப்பு முழுமையடைய 18 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த எச்டிஎஃப்சி வங்கியில் 41 % பங்குகள் எச்டிஎஃப்சி வசம் இருக்கும் எனவும் பங்குதாரர்கள் 25 எச்டிஎஃப்சி பங்குகளை வைத்திருந்தால் 42 எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.
இந்த இணைப்பிற்குப் பின் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-க்கு அடுத்த இடத்தில் எச்டிஎஃப்சி வங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.