ரூ.40 ஆயிரத்தில் தொடரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.40,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.40,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உயா்ந்து வந்தது. இதன் தொடா்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. மேலும், விலை உயரவே வாய்ப்பு உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை விலை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.40,088-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.5,011-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.74,400 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,011
1 பவுன் தங்கம்............................... 40,088
1 கிராம் வெள்ளி............................. 74.40
1 கிலோ வெள்ளி.............................74,400
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 5,012
1 பவுன் தங்கம்............................... 40,096
1 கிராம் வெள்ளி............................. 74.60
1 கிலோ வெள்ளி.............................74,600.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...