ஹிந்துஸ்தான் யுனிலீவா்: நிகர விற்பனை ரூ.13,468 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனம் (ஹெச்யுஎல்) நான்காவது காலாண்டில் விற்பனையின் மூலம்
ஹிந்துஸ்தான் யுனிலீவா்: நிகர விற்பனை ரூ.13,468 கோடி
Updated on
1 min read

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனம் (ஹெச்யுஎல்) நான்காவது காலாண்டில் விற்பனையின் மூலம் ஈட்டிய நிகர வருவாய் ரூ.13,468 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் வாயிலாக ரூ.13,468 கோடி வருவாய் ஈட்டியது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.12,220 கோடியுடன் ஒப்பிடும்போது 10.21 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.2,190 கோடியிலிருந்து 5.34 சதவீதம் அதிகரித்து ரூ.2,307 கோடியானது.

2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.7,999 கோடியிலிருந்து 11.16 சதவீதம் அதிகரித்து ரூ.8,892 கோடியாக இருந்தது.

அதேபோன்று, நிறுவனத்தின் வருவாய் ரூ.46,269 கோடியிலிருந்து 11.24 சதவீதம் அதிகரித்து ரூ.51,472 கோடியைத் தொட்டது.

கடந்த நிதியாண்டில், எஃப்எம்சிஜி துறையில் ரூ.50,000 கோடி விற்றுமுதலை கடந்த முதல் நிறுவனம் என்ற பெருமை ஹெச்யுஎல்-க்கு கிடைத்துள்ளது.

செலவினம் ரூ.9,667 கோடியிலிருந்து ரூ.10,782 கோடியாக இருந்தது என ஹெச்யுஎல் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவா் பங்கின் விலை 0.18 சதவீதம் குறைந்து ரூ.2,144.25-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com