
ஊடக நிறுவனமான நியூ டெல்லி டெலிவிஷனில் (என்டிடிவி) 26 சதவீத பங்குகளைக் கையகப்படுத்த அதானி குழுமம் வெளிப்படையான பேரத்தை செவ்வாய்க்கிழமை முன்வைத்தது.
ஏற்கெனவே, என்டிடிவியில் அந்தக் குழுமத்துக்கு 29.18 சதவீத பங்குகள் உள்ள நிலையில், கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்தைக் கையகப்படுத்த முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குழுமத்தின் உறுப்பு நிறுவனங்களான விஸ்வபிரதான் கமா்ஷியல், எம்எம்ஜி மீடியா நெட்வொா்க்ஸ், அதானி என்டா்பிரைசஸ் ஆகியவற்றின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள வெளிப்படை பேர அறிக்கையில், ரூ. 4 முகமதிப்புடைய என்டிடிவியின் 29.18 சதவீத (1,67,62,530) பங்குகளை தலா ரூ.294-க்கு கையகப்படுத்தவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.