ஆட்டோ எக்ஸ்போ: 2023-ல் மாருதி சுஸுகியின் புதிய கார் அறிமுகம்

மாருதி சுஸுகி ஜிம்னி 5-டோர் வேரியன்ட் கார் இந்தியாவில் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ: 2023-ல் மாருதி சுஸுகியின் புதிய கார் அறிமுகம்
Updated on
1 min read

மாருதி சுஸுகி ஜிம்னி 5-டோர் வேரியன்ட் கார் இந்தியாவில் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி காரானது வட இந்தியாவில் தொலைக்காட்சி படப்பிடிப்பின் போது தென்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாருதி நிறுவனம் தனது 5 டோர் ஜிம்னி-யை குறிப்பாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விற்பனைக்கான அறிமுகத்தையும் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தலைநகர் தில்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஜிம்னி ஒரு உலகளாவிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசூகி ஜிம்னியை K15C டூயல்ஜெட் இஞ்சினுடன் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய எஞ்சின் 103hp ஆற்றலையும் 137nm டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு என தெரியவந்துள்ளது.

மாருதி சுஸூகி ஜிம்னி இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்காவுடன் போட்டியிடும். இருப்பினும் தார் மற்றும் கூர்க்கா இரண்டும் 3-கதவு வடிவத்தில் மட்டுமே கிடைக்கின்றன. இந்தியாவில் ஜிம்னியை ரூ.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தும் என தெரியவந்துள்ளது.

5-கதவுகள் கொண்ட ஜிம்னி கார் 1.5-லிட்டர் கொண்ட 4 சிலிண்டர் உடன் K15பி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் 103 bhp பவர் மற்றும் 138 Nm டார்க்கை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் ஏற்கனவே எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் பிரெஸ்ஸா போன்ற கார்களில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com