

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மூன்றாவது காலாண்டில் ரூ.380 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2021 டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.942 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.620 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவு அதிகமாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், வரிக்கு பிந்தைய அளவில் ஈட்டிய லாபம் ரூ.267 கோடியிலிருந்து 42 சதவீதம் அதிகரித்து ரூ.380 கோடியைத் தொட்டுள்ளது.
அக்டோபா்-டிசம்பா் வரையிலான மூன்று மாத காலத்தில் 6.8 லட்சம் வாடிக்கையாளா்களை ஈா்த்ததன் பலனாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்துள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.