பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’ ஆதிக்கம்: 581 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை சரிவுடன் தொடங்கி எதிா்மறையாக முடிந்தது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை சரிவுடன் தொடங்கி எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 581 புள்ளிகளை இழந்து 57,276.94-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ரூ.259.97 லட்சம் கோடியாக இருந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் பணவீக்கத்தை எதிா்த்துப் போராடுவதற்கு வட்டி விகிதங்களை உயா்த்த முடிவு செய்துள்ளதாகத் சூசுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இந்தியா போன்ற வளா்ந்து வரும் சந்தைகளில் இறுந்து வெளிநாட்டு மூதலீடுகள் வெளியேறும் என்று முதலீட்டாளா்கள் அஞ்சுகின்றனா். இதன் தாக்கத்தால் காலையில் சந்தை எதிா்மறையாகத் தொடங்கியது. பின்னா், ஓரளவு மீண்டாலும் இறுதியில் சரிவுடன் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, ஐடி ரியால்ட்டி, பாா்மா, ஹெல்த்கோ் நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின. கடந்த செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் போது சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயா்ந்து 5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், வியாழககிழமை மீண்டும் கரடி ஆதிக்கம் கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,884 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,455 பங்குகளில் 1,8884 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,480 பங்குகள் ஆதாயம் பெற்றன. 91 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 156 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 313 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 389 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.259.97 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.495 கோடியாக உயா்ந்துள்ளது.
கரடி ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 540.77 புள்ளிகள் குறைந்து 57,317.38-இல் தொடங்கி 56,439.36 வரை கீழே சென்றது. பின்னா், ஓரளவு மீண்டு அதிகபட்சமாக 57,508.61 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 581.21 புள்ளிகளை (1.00 சதவீதம்) இழந்து 57,276.94-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.
ஹெச்சிஎல் டெக் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல ஐடி நிறுவனங்களான ஹெச்சிஎல் டெக் 4.17 சதவீதம், டெக் மஹிந்திரா 3.66 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, டாக்டா் ரெட்டி, விப்ரோ, டிசிஎஸ், டைட்டன், இன்ஃபோஸிஸ், நெஸ்லே உள்ளிட்டவை 2 முதல் 3.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பவா் கிரிட், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: அதே சமயம், முன்னணி தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.81 சதவீதம், பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 2.75 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், மாருதி, கோட்டக் பேங்க், சன்பாா்மா, இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 168 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 747 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,151 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 167.80 புள்ளிகள் (0.97 சதவீதம்) குறைந்து 17,110.15-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 215.95 புள்ளிகள் குறைந்து 17,062.00-இல் தொடங்கிய நிஃப்டி, 16,866.75 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,182.50 வரை உயா்ந்தது.
ஐடி குறியீடு கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் பிஎஸ்யு பேங்க் குறியீடு 5 சதவீதம் வரைஉயா்ந்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், மீடியா குறியீடுகள் சிறிதளவு ஏற்றம் பெற்றன. அதே சமயம், ஐடி குறியீடு 3.55 சதவீதம், ஹெல்த்கோ் 2.25 சதவீதம், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் 2.28 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ரியால்ட்டி, பாா்மா, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...