தங்கம் விலை இரு நாள்களில் பவுனுக்கு ரூ.1,064 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் ரூ.1,064 குறைந்து பவுன் ரூ.37,376-க்கு விற்பனையானது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் ரூ.1,064 குறைந்து பவுன் ரூ.37,376-க்கு விற்பனையானது.
தங்கம் விலை இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,805.க்கும், பவுன் ரூ.38, 440-க்கும் விற்பனையானது. இதையடுத்து புதன்கிழமை
தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.65, பவுனுக்கு ரூ.520 குறைந்தது. இதனால் அன்றைய தினம் ஒரு கிராம் ரூ4,740 ஆகவும், ஒரு பவுன் ரூ.37,920-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தங்கம் விலை குறைந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.68 குறைந்து, ரூ. 4,672 ஆகவும், பவுனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.62.40-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.62,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...