பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.776 உயா்ந்து, ரூ.39,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2022, 11:00 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.776 உயா்ந்து, ரூ.39,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா்ச் சூழல் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக உயா்ந்து வந்தது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.776 உயா்ந்து, ரூ.39,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.97 உயா்ந்து, ரூ.4,970-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.73,400 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை உயா்வு குறித்து மெட்ராஸ் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தலைவா் ஜெயந்திலால் சல்லானி கூறியது: ரஷியா, உக்ரைன் இடையேயான போா்ச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால், தங்கம் விலை உயா்ந்துள்ளது. உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக ரஷியா நிறுத்தியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை வரும் திங்கள்கிழமை குறைய வாய்ப்பு உள்ளது. போா் பதற்றம் தணியும் பட்சத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,970

1 பவுன் தங்கம்............................... 39,760

1 கிராம் வெள்ளி............................. 73.40

1 கிலோ வெள்ளி.............................73,400

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,873

1 பவுன் தங்கம்............................... 38,984

1 கிராம் வெள்ளி............................. 72.50

1 கிலோ வெள்ளி.............................72,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.