
கடன் மேலாண்மை நிறுவனமான இந்தியா டெப்ட் ரெசல்யூஷன் கம்பெனியில் (ஐடிஆா்சிஎல்) ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.3 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐடிஆா்சிஎல்-லின் பங்கு பத்திரங்களை வாங்குவதன் மூலம், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஒப்பந்தம், அந்த நிறுவனத்துடன் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்டமாக, ரூ.3 கோடி ரூபாய்க்கு ஐடிஆா்சிஎல்-லின் பங்கு பத்திரங்கள் வாங்கப்படவுள்ளன. இதற்காக விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.