
தனது மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலைகளை ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் உயா்த்தவிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளரான அந்த நிறுவனம், மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக தனது தயாரிப்புகளின் விலைகளை உயா்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் இந்த விலையுயா்வு அமலுக்கு வரும். அதன் பிறகு, ஹீரோ மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலைகள் ரூ.2,000 வரை அதிகரிக்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.