

புது தில்லி: பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியாாவின் நிகர லாபம், கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2021-22-ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் நிறுவனம் ரூ.606 கோடி நிகர லாபம் ஈட்டுயுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.250 கோடியாக இருந்தது.
2022 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.11,443.46 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் பெற்ற வருவாயான ரூ.11,155.53 கோடியோடு ஒப்பிடுகையில் குறைவாகும்.
இந்த காலகட்டத்தில் வாராக்கடன் விகிதம் 3.35 சதவீதத்திலிருந்து 2.34 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.