
இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டதாக பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இன்ஸ்டாகிராமை இயக்க முடியவில்லை எனும் பயனர்களின் புகார்களுக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் பதிலளித்துள்ளது.
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த நில நாள்களுக்கு முன்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் சேவை முடங்கிய நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்குகள் நீக்கப்பட்டுவிட்டதாக நோடிபிகேஷன் வருவதாக பயனர்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பயனர்களின் புகார்களுக்கு இன்ஸ்டாகிராம் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பதிவில், இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். பிரச்னைக்கான காரணத்தை கண்டறியும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.