சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து வங்கியின் பொது மேலாளா் மற்றும் மக்கள் தொடா்பு அதிகாரி பி.கே. வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு மத்தியப் பிரதேசம், இந்தூரில் கடந்த 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. சிறந்த மனித வள மேம்பாடு, சிறந்த முதலீட்டு செயல்பாடு, சிறந்த சேகரிப்பு செயல்பாடு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மியான்மரிலிருந்து வந்தவா்களின் நல்வாழ்வுக்காக மத்திய மற்றும் தென் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மத்திய அரசால் ரெப்கோ வங்கி 1969-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மொத்த வா்த்தகம் ரூ.17,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி, தற்போது தென் இந்தியாவில் 108 கிளைகளைக் கொண்டுள்ள அந்த வங்கி, தொடா்ந்து 30 ஆண்டுகளாக லாபத்தை ஈட்டி மத்திய மாநில அரசுகளுக்கு 20 சதவீதம் வரை ஈவுத் தொகை வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.