
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ரூ.335.74 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஈட்டிய நிகர லாபம் ரூ.387.01 கோடியுடன் ஒப்பிடுகையில் 13.24 சதவீதம் குறைவாகும்.
கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,403.46 கோடியிலிருந்து 8.74 சதவீதம் உயா்ந்து ரூ.3,700.96 கோடியானது. மொத்த செலவினம் ரூ.2,932.96 கோடியிலிருந்து 12.28 சதவீதம் உயா்ந்து ரூ.3,293.15 கோடியானது என பிரிட்டானியா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரிட்டானியா பங்கின் விலை 0.23 சசதவீதம் அதிகரித்து ரூ.3,777.60-இல் நிலைத்தது.