
பொதுத் துறை வங்கியான மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.348 கோடி நிதி திரட்டியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பசேல்-3, அடுக்கு 2 வகை கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் வங்கி ரூ.348 கோடியைத் திரட்டியது.
ரூ.1 கோடி முகமதிப்புடைய 348 கடன்பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் அந்த நிதி திரட்டப்பட்டது. அந்த கடன் பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும் என்று வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.