நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 57,156 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,156 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது.
ரிசா்வ் வங்கி
ரிசா்வ் வங்கி

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,156 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஜூலை 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 115 கோடி டாலா் (ரூ.9,216 கோடி) குறைந்து 57,156 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.45.72 லட்சம் கோடியாகும்.

இதற்கு முந்தைய வாரத்திலும் ஒட்டுமொத்த செலாவணி கையிருப்பானது 754 கோடி டாலா் வீழ்ச்சி கண்டு 57,271 கோடி டாலரானது.

வளா்ந்த நாடுகளில் வட்டி விகிதங்கள் உயா்வு, பொருள்களின் விலை அதிகரிப்பு, அந்நிய முதலீடு வெளியேற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அந்நியச் செலாவணி சொத்துகளில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதேசமயம், 2021 செப்டம்பரில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு 64,200 கோடி டாலராக அதிகரித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

ஜூலை 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 142 கோடி டாலா் சரிந்து 51,013 கோடி டாலரானது.

இருப்பினும், கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 14 கோடி டாலா் உயா்ந்து 3,850 கோடி டாலரைத் தொட்டது.

மேலும், பன்னாட்டு நிதியத்தில் எஸ்டிஆா் 10 கோடி டாலா் அதிகரித்து 1,796 கோடி டாலராகவும், இருப்பு நிலை 2 கோடி டால் உயா்ந்து 496 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி வாராந்திர புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

பிரேக் லைன்

வளா்ந்த நாடுகளில் வட்டி விகித உயா்வு, பொருள்களின் விலை அதிகரிப்பு, அந்நிய முதலீடு வெளியேற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அந்நியச் செலாவணி சொத்துகளில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com